47 இண்டர்நேஷனல், 20 நேஷனல் டொமிஸ்டிக் விருதுகளைப் பெற்ற 'விசித்திரன்' படத்தை தமிழில் ஒருவர் கூட வாழ்த்தவில்லை: ஆர்.கே.சுரேஷ் வருத்தம்

47 இண்டர்நேஷனல், 20 நேஷனல் டொமிஸ்டிக் விருதுகளைப் பெற்ற 'விசித்திரன்' படத்தை தமிழில் ஒருவர் கூட வாழ்த்தவில்லை: ஆர்.கே.சுரேஷ் வருத்தம்

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் ‘விசித்திரன்’ படத்தை தமிழ் திரையுலகினர் யாரும் வாழ்த்தவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.பட்டத்து அரசன் திரைப்படம்

நடிகர்கள் அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டப் பலரது நடிப்பில் இந்த மாதம் 25-ம் தேதி வெளியாக இருக்கக்கூடியத் திரைப்படம் ‘பட்டத்து அரசன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது.

இதில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கலந்து கொண்டு பேசியதாவது, “இயக்குநர் சற்குணம் ‘பட்டத்து அரசன்’ என இதன் தலைப்பு சொல்லும்போதே நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். என் அப்பா 1986-ல் தயாரித்த முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அதர்வாவின் அப்பா முரளி சார். அதனால், அதர்வா எனக்கு சொந்த தம்பி. போன்றவர். அவரிடம் யூத்தாக நிறைய படங்கள் நடியுங்கள் என்று சொல்வேன்.

‘இதயம் 2 ’ படத்தை அவரை வைத்து பண்ணலாம். ராஜ்கிரண் அய்யா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் எனப் படிப்படியாக மேலே வந்தவர் அவர். ஒவ்வொரு படத்திலும் ராஜ்கிரண் சார் போல எனக்கு ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

அதே சமயத்தில் இங்கு ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ‘விசித்திரன்’ திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டக் கதை. இதுவரை கிட்டத்தட்ட 47 இண்டர்நேஷனல் விருதுகள், 20 நேஷனல் டொமிஸ்டிக் விருதுகள் போன்றவற்றை வென்றிருக்கிறது. இதற்கு எல்லாருக்கும் நன்றி. இவ்வளவு விருதுகள் வென்ற ஒரு படத்தை போஜ்புரி, பாலிவுட் துறைகளில் இருந்து நடிகர்கள் பலரும் எனக்கு வாழ்த்து சொல்லி இருந்தார்கள். ஆனால், தமிழில் இருந்து ஒருவர் கூட எனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது வருத்தம். நான் இப்போது வரை தமிழ், மலையாளம், போஜ்புரி என பல மொழிகளில் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

அதில் முன் பின்னாக சம்பளம் குறைவாகவும் அதிகமாகவும் இருந்தாலும் அதை எல்லாம் யோசிக்காது கதைக்காகவும், அங்குள்ள நண்பர்களுக்காகவும் நடித்துக் கொடுக்கிறேன். இதை ஏன் இவ்வளவு வெளிப்படையாக நான் சொல்கிறேன் என்றால், எந்த மொழியில் நடித்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in