’என் மதிப்பை எனக்கு ஞாபகப்படுத்துவது அவர்தான்’ - ஊர்வசி நெகிழ்ச்சி!

’என் மதிப்பை எனக்கு ஞாபகப்படுத்துவது அவர்தான்’ - ஊர்வசி நெகிழ்ச்சி!

இந்தியில் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தை ’வீட்ல விசேஷம்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார், ஆர்.ஜே.பாலாஜி. இதில் ஹீரோவாக நடித்துள்ள அவர், என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியும் உள்ளார். படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது.

வீட்ல விஷேசம் படத்தில்
வீட்ல விஷேசம் படத்தில்

படம் பற்றி நடிகை ஊர்வசி கூறும்போது, "என் மதிப்பை எனக்கு அதிகமாக ஞாபகப்படுத்துவது ஆர்.ஜே.பாலாஜிதான். நான் பொதுவாக நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்று பாலாஜி உறுதியாக இருந்தார். இந்தப் படம் குடும்பக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகரைப் புரிந்துகொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் பாலாஜி.

ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி
ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி

பழைய சத்யராஜை, ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்தில் கொண்டுவந்துள்ளார். இதில் பழைய நடிகர்கள் பலரை நடிக்க வைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை. இப்படத்திலும் நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட்டையும், வசூலையும் மனதில் வைத்து படத்தை இவர்கள் இயக்கியுள்ளனர்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in