‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டிக்கு மற்றுமொரு கவுரவம்

ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி

தாதா சாகேப் பால்கே விருது விழாவில் ’காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டிக்கு கூடுதல் கவுரவமாக, புதிய விருது அளிக்கப்பட உள்ளது.

கன்னடத்தில் சொற்ப பட்ஜெட்டில் உருவான காந்தாரா திரைப்படம் தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் வெளியாகி ரூ400 கோடிக்கு மேலாக வசூலை வாரிக்குவித்தது. மேலும் விமர்சன ரீதியிலும் காந்தாராவுக்கு சர்வதேச அங்கீகாரங்கள் கிடைத்து வருகின்றன.

காந்தாரா திரைப்படத்தின் பிரதான கதாப்பாத்திரத்தில் தோன்றியதோடு படத்தையும் இயக்கியும் உள்ள ரிஷப் ஷெட்டிக்கும் இந்த அங்கீகாரங்கள் சேர்ந்து வருகின்றன. அவற்றின் வரிசையில் பிப்.20 அன்று மும்பையில் நடைபெறவிருக்கும் ’தாதா சாகேப் பால்கே சர்வதேச திரை விழா’வில், ரிஷப் ஷெட்டிக்கு ’மோஸ்ட் பிராமிசிங் ஆக்டர்’ என்ற விருது வழங்கப்பட உள்ளது.

ரிஷப் ஷெட்டி தற்போது காந்தாரா திரைப்படத்தின் முன்கதையான, ’காந்தாரா -2’ உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் ரிஷப் ஷெட்டி
பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் ரிஷப் ஷெட்டி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in