`நம்பி ரூ.4.14 கோடி முதலீடு செய்தேன்; தொழிலதிபர் ஏமாற்றிவிட்டார்'

காவல்துறையில் பிரபல நடிகை புகார்
`நம்பி ரூ.4.14 கோடி முதலீடு செய்தேன்; தொழிலதிபர் ஏமாற்றிவிட்டார்'
இந்தி நடிகை ரிமி சென்

பிரபல நடிகையிடம் ரூ.4.14 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகை ரிமி சென். இவர், ஹங்கம்மா, சஜானி, தூம், கரம் மசாலா, தூம் 2, ஜானி கட்டார் உட்பட பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ரோனக் ஜதின் வியாஸ் என்பவர் மீது கர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ரிமி சென்
ரிமி சென்

அதில், நடிகை ரிமி தெரிவித்திருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு வியாஸை, ஜிம் ஒன்றில் சந்தித்தேன். நட்பாகப் பழகினார். அப்போது தனது சினிமா நிறுவனம் மூலம் தொடங்க இருக்கும் புதிய தொழிலில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு 28-30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தார். பிறகு சில முறை அதை வற்புறுத்தினார்.

அவர் பேச்சை நம்பி ரூ.4.14 கோடி முதலீடு செய்தேன். இதுவரை அவர் அசலையோ, லாபத்தையோ தரவில்லை. இதுபற்றி அவரிடம் விசாரித்தும் சரியான பதில் இல்லை.

இவ்வாறு ரிமி சென் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.