சினிமாவாகிறது தமிழக சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை!

சினிமாவாகிறது தமிழக சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை!

பிரபல சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதை சினிமாவாக எடுக்கப்படுகிறது.

திருவனந்தபுரம், புத்தன் சந்தை பகுதியில் 1891-ம் ஆண்டு பிறந்தவர் செண்பகராமன். இளம் வயதிலேயே ஜெர்மன் சென்ற அவர் வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்டார். ’ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர் இவர்தான். பின்னர் இந்த வார்த்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் முழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியர்கள் பற்றி அவதூறாகக் கருத்து தெரிவித்த ஹிட்லரிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வைத்தவர் செண்பகராமன்.

ஆங்கில அரசுக்கு எதிராக புனித ஜார்ஜ் கோட்டையில், எம்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் மூலம் குண்டு வீசியவரும் இவர்தான். தென்னாட்டு போஸ் என்றும், ‘ஜெய்ஹிந்த்’ கோஷத்தின் தந்தையாகவும் போற்றப்படும் இவருடைய வாழ்க்கை கதை சினிமாவாகிறது. ஆங்கிலத்தில் உருவாகும் இந்தப் படத்தை ராஜேஷ் டச்ரிவர் இயக்குகிறார்.

இவர் ஏற்கெனவே, இன் த நேம் ஆஃப் புத்தா, 10 த ஸ்ட்ரேஞ்சர்ஸ், என்டெ உட்பட சில படங்களை இயக்கியவர். அஞ்சும் ரிஸ்வி பிலிம் நிறுவனம், அனுராக் என்டர்டெயின்மென்ட் லிஃப்ட் இண்டியா ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கின்றன.

இந்தப் படம் தமிழ், மலையாளம் உள்பட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது. நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in