ஓடிடி உலா - ஆக்‌ஷன் காமெடி மசாலா!

ஓடிடி உலா - ஆக்‌ஷன் காமெடி மசாலா!

நெட்ஃப்ளிக்ஸ் வரலாற்றில் அதிக விலைக்கு போணியான திரைப்படம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது, அமெரிக்க ஆக்‌ஷன் காமெடியான ’ரெட் நோட்டீஸ்’ திரைப்படம். இந்திய மதிப்பில் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.1்,480 கோடி! ட்வைன் ஜான்சன், கல் கதோத், ரியான் ரெனால்ட்ஸ் என ஊதியத்தில் உலக அளவில் முதன்மை வகிக்கும் நட்சத்திரங்கள் நடிக்க, ராஸன் மார்ஷல் இயக்கியிருக்கிறார்.

திருடன் - போலீஸ் விளையாட்டு

கலைப்பொருட்களைக் குறிவைத்து களவாடும் உலகமகா திருடர்கள் வரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பவனை வளைப்பதற்கான ’ரெட் நோட்டீஸ்’ அறிவிப்பை, சர்வதேசப் போலீஸான இன்டர்போல் விடுக்கிறது. அமெரிக்க உளவு அமைப்பான எஃப்பிஐ ஏஜென்ட் ஒருவர் இந்தக் கலைத்திருடனைப் பிடிக்க களமிறங்குகிறார். இந்த முயற்சியில், கலைப்பொருள் திருடர் பட்டியலின் திருவாளர் வரிசையில் முதலிடத்தில் இருப்பவரையும் எதிர்கொள்ள நேர்கிறது. இந்தத் திருடர்களை வளைக்க முற்படும் எஃப்பிஐ ஏஜென்ட் மீதே, ஒரு கட்டத்தில் குற்றச்சாட்டு திரும்புகிறது. தன்னை நிரூபிப்பதோடு, தேடப்படும் திருடர்களைப் பிடிப்பது, கலைப்பொருட்களையும் மீட்பது என்று எஃப்பிஐ ஏஜென்டுக்குச் சவால்கள் எகிறுகின்றன. அவற்றை இவர் சாதித்தாரா என்பதே ‘ரெட் நோட்டீஸ்’ திரைப்படம்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in