ரேவதி, ஜோஜு ஜார்ஜ், பிஜூ மேனனுக்கு விருது

பிஜூ மேனன், ரேவதி, ஜோஜு ஜார்ஜ்
பிஜூ மேனன், ரேவதி, ஜோஜு ஜார்ஜ்
Updated on
1 min read

நடிகை ரேவதி, ஜோஜு ஜார்ஜ், பிஜூமேனன் ஆகியோருக்கு கேரள அரசின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

52-வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது விவரங்களை கேரள கலாச்சார அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார். இதில் 'மதுரம்' மற்றும் 'நாயட்டு', ‘ப்ரீடம் பைட்’ படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ஜோஜூ ஜார்ஜுக்கும் 'ஆர்க்கரியாம்' படத்தில் முதியவராக நடித்தத பிஜு மேனனுக்கும் இணைந்து சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

பிஜூ மேனன், ரேவதி, ஜோஜு ஜார்ஜ்
பிஜூ மேனன், ரேவதி, ஜோஜு ஜார்ஜ்

’பூதகாலம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த நடிகை விருது நடிகை ரேவதிக்கு கிடைத்துள்ளது. சிறந்த திரைப்படமாக கிருஷாந்த் இயக்கிய ’ஆகாச வியூகம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசை அமைப்பாளர் (பாடல்கள்) விருது ஹிருதயம் படத்தின் இசை அமைப்பாளர் ஹிஷாம் அப்துல் வஹாப்புக்கு கிடைத்துள்ளது. சிறந்த இயக்குநர் விருது திலீஷ் போத்தனுக்கும் (ஜோஜி), 'ஜோஜி' படத்தில் நடித்ததற்காக உன்னிக்கு, சிறந்த குணச்சித்திர நடிகை விருதும் கிடைத்துள்ளது. வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய 'ஹிருதயம்' , சிறந்த பிரபலமான படத்திற்கான விருதை வென்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in