தனுஷ் நடிக்கும் படத்தின் கதையை மாற்ற வேண்டும்: இயக்குநர் வெற்றிமாறனுக்கு திடீர் நிபந்தனை விதிக்கும் தமிழ் சங்கம்

தனுஷ் நடிக்கும் படத்தின் கதையை மாற்ற வேண்டும்: இயக்குநர் வெற்றிமாறனுக்கு திடீர் நிபந்தனை விதிக்கும் தமிழ் சங்கம்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை 2' படத்திற்கு வடசென்னை தமிழ் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை', 'அசுரன்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் வென்றது. இதில் 2018-ம் ஆண்டு வெளியான 'வடசென்னை' படத்திற்கு கிடைத்த வெற்றியால், இப்படத்தின் இரண்டாம் பாகம் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், அதற்கு திடீரென எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'வடசென்னை 2' என படத்திற்கு பெயரிட்டு அதில் போக்குவரத்து நெரிசல், குடிசை வீடு, அழுக்கு சாலை, குற்றம் செய்கிற மனிதர்கள் என தவறாக சித்தரிப்பதாக வடசென்னை தமிழ் சங்க தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வட சென்னையில் இருக்கும் இளைஞர்கள் படித்து முன்னேறி பெரிய வேலைகளிலும், ஐ.டி கம்பெனிகளிலும் வேலை பார்க்கின்றார்கள். ஆனால் 'வடசென்னை' படத்தில் படு லோக்கலாகவே இளைஞர்களை காண்பிக்கின்றனர். இப்படி வடசென்னை என்று டைட்டில் வைத்துக் கொண்டு எங்களை தவறாக காண்பித்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் படத்தின் கதையை மாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் டைட்டிலை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்த படத்திற்கு எதிராக கடும் போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in