`நடிகை கெளதமியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும்'

வருமானவரித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
`நடிகை கெளதமியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும்'

மூலதன ஆதாய வரியில் 25% செலுத்தும் பட்சத்தில் நடிகை கௌதமியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது 6 வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கியது தொடர்பாக நடிகை கௌதமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கடந்த 2016-ம் ஆண்டு ரூ.4.10 கோடிக்கு விற்றதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையம், விவசாய நிலத்தின் வருவாய் 11.17 கோடி என மதிப்பீட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அந்த உத்தரவை தொடர்ந்து தனது 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், இதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுபட்டதால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி, மூலதன ஆதாய வரியில் 25% செலுத்திய பிறகு, நடிகை கௌதமியின் 6 வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நான்கு வாரங்களுக்குள் மீதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்திவைத்த நீதிபதி, விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in