வெளியானது `பிரின்ஸ்': திரையரங்கில் ரசிகர்களுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்! (வீடியோ)

வெளியானது `பிரின்ஸ்': திரையரங்கில் ரசிகர்களுடன் ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்! (வீடியோ)

நாடு முழுவதும் பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியானது. சென்னை ரோகினி திரையங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படம் பார்த்தோடு, ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `பிரின்ஸ்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இத்திரைப்படத்தில் ’பிம்பிலிக்கி பிலாப்பி’ மற்றும் ‘ஜெசிக்கா’ ஆகிய பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. சென்னை ரோகினி திரையங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். அப்போது, பாடல் ஒன்றிற்கு ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் டான்ஸ் போட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in