'ஆதார்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் பார்த்திபன்!

ரசிகர்களுக்கு நடிகர் கருணாஸ் பொங்கல் பரிசு
நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் கருணாஸ் நடித்துள்ள 'ஆதார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகுமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் `ஆதார்'. கருணாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்கியுள்ளார். இவர், ஏற்கெனவே திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண்பாண்டியன், திலீபன், பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

'ஆதார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
'ஆதார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கும் இந்த படத்திற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கவிஞர் யுரேகா பாடல் எழுதியுள்ளார். படத்தின் கலை இயக்கத்தை கலை இயக்குநரான சீனு கவனித்திருக்கிறார்.

இந்நிலையில், 'ஆதார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பொங்கல் திருநாளான இன்று தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் கருணாஸின் தோற்றம் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in