சிம்பு ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தி: 'வெந்து தணிந்தது காடு’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தி: 'வெந்து தணிந்தது காடு’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் கௌதம் மேனன் அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிம்புவின் நடிப்பில் திரைக்கு வெளிவர தயாராக இருக்கும் படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ஆகிய இரண்டு வெற்றிப் படங்களைத் தந்துள்ளனர்.

தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் உருவான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி என்ற இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் படத்தைத் தயாரித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்திற்கான டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in