அரவிந்த் சாமியின் `கள்ளபார்ட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கள்ளபார்ட் - ரெஜினா, அரவிந்த்சாமி
கள்ளபார்ட் - ரெஜினா, அரவிந்த்சாமி

அரவிந்த் சாமி நடித்துள்ள 'கள்ளபார்ட்' திரைப்படம் மே மாதம் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

விக்ரம், தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தைத் தயாரித்த மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் படம், ’கள்ளபார்ட்’. அரவிந்த்சாமி, ரெஜினா நடித்துள்ள இந்தப் படத்தில் பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெராடி ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

’என்னமோ நடக்குது’, ’அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இதை இயக்கியுள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்ன இசை அமைத்துள்ளார். கங்கை அமரன், சரஸ்வதி மேனன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Picasa

படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ’கள்ளபார்ட்’ என்பது பொருந்தும் என்பதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்களாம்.

‘இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக் களத்தை இந்தப் படத்தில் சொல்கிறோம். படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். அதை பார்க்கும்போது ரசிகர்கள் உணர்வார்கள். மே மாதம் வெளியாக உள்ளது’ என்கிறார் இயக்குநர் பி.ராஜபாண்டி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in