வெப் தொடரில் விஜய் சேதுபதி - ரெஜினா ஜோடி

வெப் தொடரில் விஜய் சேதுபதி - ரெஜினா ஜோடி

'பேமிலிமேன்' வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கும் வெப் தொடரில், விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்கிறார்.

விறுவிறுப்பாகப் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த வெப் தொடரில், ஷாகித் கபூருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை ரெஜினா கசன்ட்ரா ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கெனவே 'முகிழ்' என்ற தமிழ்ப் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in