’ராதே ஷியாம்’ படத்தை தமிழில் வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்

’ராதே ஷியாம்’ படத்தை தமிழில் வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்
பிரபாஸ், பூஜா ஹெக்டே

பிரபாஸ் நடித்துள்ள ’ராதே ஷியாம்’ படத்தை. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

’பாகுபலி’ பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம், ’ராதே ஷியாம்’. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பிரபாஸ், விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராகவும் டாக்டர் பிரேர்னா எனும் கேரக்டரில் பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். மற்றும் இந்தி நடிகை பாக்கியஸ்ரீ, சச்சின் கெடேக்கர், குணாள் ராய் கபூர், ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபாஸ்
பிரபாஸ்

ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னணி இசையை தமன் அமைத்துள்ளார். படத்தின் தமிழ் வசனங்களையும் பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் மார்ச் 11-ம் தேதி படம் வெளியாகிறது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர், பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in