'துணிவு' படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்: அசத்தல் அப்டேட்

'துணிவு' படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்: அசத்தல் அப்டேட்

'துணிவு' படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாங்காங் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச்.வினோத்- போனிகபூர்- அஜித் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ‘துணிவு’. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி 'துணிவு' படம் வெளியாக இருக்கிறது. இதை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in