
துணிவு, வாரிசு படங்கள் இன்று ரிலீஸானது. தியேட்டர்களில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டதால் போலீஸ் தடியடி நடத்திக் கலைத்தனர்.
அஜித்குமார் நடித்துள்ள `துணிவு' படம் மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகத்தில் `துணிவு' திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியானது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தியேட்டரில் அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி வெளியானது. 'வாரிசு' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது.
சென்னை ரோகினி திரையரங்கில் வாரிசு பட பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. வாரிசு பட பேனர்கள் மீது பட்டாசு, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வீசி அஜித் ரசிகர்கள் அட்டகாசம் செய்தனர். புதுச்சேரியில் டிக்கெட் எடுக்காமல் உள்ளே சென்ற விஜய் ரசிகர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், ரசிகர்கள் நாலாப்பக்கமும் சிதறி ஓடினர். பல தியேட்டர்களில் டிக்கெட் 2 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதை கண்டித்து ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.