‘மாஸ் மகாராஜா’வை இயக்குகிறார் தனுஷ் பட இயக்குநர்!

‘மாஸ் மகாராஜா’வை இயக்குகிறார் தனுஷ் பட இயக்குநர்!

தனுஷின் 'மாரி' மற்றும் 'மாரி 2' படங்களை இயக்கிய பாலாஜி மோகன், பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

சித்தார்த், அமலா பால் நடித்த ’காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், பாலாஜி மோகன். தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, துல்கர் சல்மான், நஸ்ரியா நடித்த ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை தமிழ், மலையாள மொழிகளில் இயக்கினார். இதையடுத்து தனுஷ் நடித்த ‘மாரி’ மற்றும் ‘மாரி 2’ படங்களை இயக்கினார்.

இந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, ’மாஸ் மகாராஜா’ என அழைக்கப்படும் பிரபல தெலுங்கு ஹீரோ ரவி தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ரவி தேஜா நடித்து சமீபத்தில் வெளியான ‘கில்லாடி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து அவர் ‘ராமாராவ் ஆன் டூட்டி’, ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ ஆகிய பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை மும்பையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in