துபாயில் நடைபெறும் 'இராவண கோட்டம்' இசை வெளியீடு!

‘இராவண கோட்டம்’
‘இராவண கோட்டம்’ துபாயில் நடைபெறும் 'இராவண கோட்டம்' இசை வெளியீடு!

துபாயை அடிப்படையாகக் கொண்ட கேஆர்ஜி (KRG) குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ மூலம் பொழுதுபோக்கு துறையில் இறங்குகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறுகையில், 'துபாயில் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் பெரிய ஸ்டார்களின், பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. இப்போது, எனது முதல் தயாரிப்பான 'இராவண கோட்டம்' படத்தின் இசை வெளியீட்டு விழா தி இந்தியன் ஹை ஸ்கூல், ஓத் மேத்தா, ஷேக் ரஷித் ஆடிட்டோரியத்தில் மார்ச் 18 மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு ஒரு பிரம்மாண்டமான நிகழ்வாக நடைபெறுவதை உறுதிசெய்ய எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையிலான வாய்ப்பாக 'இராவண கோட்டம்' திரைப்படம் அமையும் எனவும் படக்குழு நம்பிகைத் தெரிவித்துள்ளது.

கார்த்திக் நேதா எழுதிய யாசின் நிசார் மற்றும் வந்தனா சீனிவாசன் பாடியுள்ள படத்தின் முதல் சிங்கிளான 'அத்தன பேர் மத்தியில' அதன் மெல்லிசை ட்யூன் மற்றும் அழகான வரிகளுக்காக இசை ஆர்வலர்களிடமிருந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது. பாடல் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் ‘ஆர்கானிக்’ பார்வைகளைக் கடந்துள்ளது.

ஷாந்தனு பாக்யராஜ், பிரபு, ஆனந்தி, இளவரசு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். கண்ணன் ரவி குழுமத்தின் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in