ரத்தன் டாட்டா பயோபிக் இயக்குகிறேனா?: சுதா கொங்கரா கொடுத்த விளக்கம்

ரத்தன் டாட்டா பயோபிக் இயக்குகிறேனா?: சுதா கொங்கரா கொடுத்த விளக்கம்

ரத்தன் டாட்டா பயோபிக் இயக்குவது குறித்து வெளியான செய்திகளுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் கொடுத்துள்ளார்.

’சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா தற்போது அதன் இந்தி ரீமேக்கில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், அவர் தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பயோபிக் இயக்க இருப்பதாகவும் அதற்கானப் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்திகளை மறுத்து இயக்குநர் சுதா கொங்கரா ட்வீட் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில்," ‘நான் ரத்தன் டாட்டாவின் மிகப் பெரிய ரசிகை. ஆனால், இப்போதுது யாருடைய பயோபிக்கையும் இயக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய அடுத்தப் படம் குறித்தான உங்கள் அனைவரது ஆர்வத்திற்கும் நன்றி. விரைவில் அடுத்தப் படம் குறித்து அறிவிக்கிறேன்" எனக் கூறியுள்ளார் சுதா. ’சூரரைப் போற்று’ திரைப்படம் கேப்டன் கோபிநாத்துடைய வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in