வாரிசு படத்தில் ராஷ்மிகாவின் சம்பளம்?

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

சமந்தா, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி என தெலுங்குப் படவுலகை கலங்கடித்து வரும் கதாநாயகிகளின் பட்டியலில் பத்து பேர் இருந்தாலும் அதில் தனியாக கெத்து காட்டி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. எல்லாம் புஷ்பா பாடத்தின் ‘ஓ மாமா’ பாடலுக்குப் பிறகு வந்த வண்டி வண்டியான புகழ். விஜய் தெலுங்கில் நேரடியாக நடித்துவரும் ‘வாரிசு’ படத்தில் அவர்தான் நாயகி என்றான பிறகு அவரது தென்னிந்திய மார்க்கெட் இன்னும் எகிறிவிட்டது.

கடந்த 2016-ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்கிற கன்னடப் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய பார்ட்டி ஆடைகளால் பரபரப்பைக் கிளப்பும் நாயகி. தெலுங்கில் ‘சலோ’ என்ற படத்தின் மூலம் 2018-ல் அறிமுகமானபோது ராஷ்மிகாவின் சம்பளம் 21 லட்சம். தற்போது ஒரு மொழிக்கு 30 லட்சம் வீதம் கணக்கிட்டு நான்கு மொழிக்கு 1.2 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். இது தவிர, ‘வாரிசு’ படத்துக்கான புரமோ டூரின்போது ஒவ்வொரு நகரத்துக்கும் வந்து செல்ல 2.5 லட்சம் தனியாகச் சம்பளம் கொடுக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்களாம்.

இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தொட்டபோது தனது தோழிகளை அழைத்து பெரும் பார்ட்டி கொடுத்துக் கொண்டாடினார் ராஷ்மிகா. அந்தப் பார்ட்டி முடிந்து 6 மாதமே ஆகியிருக்கும் நிலையில் தற்போது மேலும் 50 லட்சம் பேர் ராஷ்மிகாவை பின் தொடர்கிறார்கள்.

தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கும் 'குட்பாய்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. சரியான வாய்ப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாலிவுட்டில் தனக்காக கதை கேட்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறாராம் ராஷ்மிகா. இதையெல்லாம் தாண்டி, ராஷ்மிகா மீது உருகியிருக்கும் ஒரு ஆர்த்தோ டாக்டரின் தற்போதைய இன்ஸ்டா பதிவுதான் லேட்டஸ்ட் ஹாட்!

ராஷ்மிகாவுடன் குரவ ரெட்டி...
ராஷ்மிகாவுடன் குரவ ரெட்டி...

சமீபத்தில் தன்னுடைய முட்டி வலிப் பிரச்சினைக்காக ஆர்த்தோ நிபுணரான குரவ ரெட்டியைச் சிகிச்சைக்காக சந்தித்துள்ளார் ராஷ்மிகா. இது தொடர்பான புகைப்படங்களை குரவ ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ‘சாமி...சாமி... என்று முழங்காலில் முழு எடையையும் தாங்கி ஆடியதால் தான் மூட்டு வலி வந்துள்ளது என என்னிடம் வந்த ஸ்ரீவள்ளியே என நான் அவரை நகைச்சுவையாக வரவேற்றேன். புஷ்பா படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபோது நான் ராஷ்மிகாவை அழைத்து வாழ்த்த விரும்பினேன். அந்த சந்தர்ப்பம் அவரின் முழங்கால் வலியால் அமைந்து விட்டது. அதுபோல அல்லு அர்ஜுனுக்கு விரைவில் தோள்பட்டை வலி வரும்’ என வேடிக்கையாக பதிவிட்டு, ராஷ்மிகாவுடன், தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் குரவ ரெட்டி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in