ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ: 19 வயது டெல்லி இளைஞரிடம் தீவிர விசாரணை!

ராஷ்மிகா போலி வீடியோ
ராஷ்மிகா போலி வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான நிலையில் இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த விவகாரத்தில் 19 வயது இளைஞர் ஒருவரிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

கடந்த வாரத்தில் இணையத்தில் டீப் ஃபேக் டெக்னாலஜி என்ற வார்த்தை விவாதப் பொருளானது. இதற்கு முக்கியக் காரணம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரிக்கும் வகையிலான வீடியோ தான். உண்மையில் அந்த வீடியோவில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண்.

இவரது வீடியோவைத் தான் ராஷ்மிகா போல டீப் பேக் முறையில் எடிட் செய்து இணையத்தில் பரப்பினர். ராஷ்மிகா மட்டுமல்லாமல், நடிகை கத்ரீனாவும் இது போன்ற போலி ஆபாச புகைப்படத்தால் பாதிக்கப்பட்டார்.

இப்படி தவறாகப் பிரபலங்களைச் சித்தரிப்பவர்களையும் இது போன்ற டெக்னாலஜியை தவறாக பயன்படுத்துவதையும் தடுக்க நடவடிக்கை வேண்டும் என நடிகர் அமிதாப் பச்சன் முதற்கொண்டு இணையத்தில் பலரும் குரல் எழுப்ப இந்த விஷயம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

இணையத்தில் எழுந்திருக்கும் விவாதங்களில் மத்திய மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகரும் பங்கேற்று அரசின் ஆட்சேபத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளின் கீழான நடவடிக்கைகள் சிலவற்றையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டு விழிப்புணர்வு தந்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, ராஷ்மிகா விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் ஆணையமும் வலியுறுத்தியது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்தது. 

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

தற்போது இந்த விவகாரத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் விசாரணை வளையத்தில் வந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான், அந்த ஆபாச போலி வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து டவுன்லோட் செய்த பின்னரே, தனது பக்கத்தில் அப்லோட் செய்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மொபலை ஆராயும் பணியில் டெல்லி காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in