விஜய்க்கு ஜோடியாவாரா ராஷ்மிகா மந்தனா?

விஜய்க்கு ஜோடியாவாரா ராஷ்மிகா மந்தனா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்ததையடுத்து, தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66-வது திரைப்படத்தில் ஜனவரி மாதம் முதல் நடிக்கவுள்ளார் விஜய். இத்திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், விஜய்யுடன் ஏற்கெனவே ‘பைரவா’, ‘சர்கார்’ திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் இத்திரைப்படத்திலும் நடிக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், சமீபமாக அளித்த பேட்டியொன்றில் விஜய்யின் புதிய படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது விஜய்யின் 66-வது திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக ஒரு செய்தி டோலிவுட் வட்டாரத்தில் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பாக விஜய்யுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிப்பதற்குக் கடுமையான முயற்சி எடுத்த ராஷ்மிகா மந்தனாவுக்கு அப்போது அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தெலுங்கில் தனது மார்க்கெட் உச்சத்திலிருப்பதால் அதைப் பயன்படுத்தி, விஜய் படத்தை அவர் கைப்பற்றி விட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in