ரன்பீரிடம் அத்தனை தாராளம் காட்டி இருக்கும் ராஷ்மிகா! வைரலாகுது லிப்-லாக்!

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

தெலுங்குத் திரையுலகில் புதுதாக எத்தனை ஹீரோயின்கள் வந்தாலும் அத்தனைபேரும் ராஷ்மிகா உருவாக்கியுள்ள நட்சத்திரப் பிரபஞ்சத்துக்கு முன்னால் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடுகிறார்கள். இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக டோலிவுட்டில் ராஷ்மிகாவுடன் ‘நம்பர் 1’ ரேஸில் யாராலும் மல்லுக்கட்ட முடியவில்லை.

ரன்வீருடன் ராஷ்மிகா மந்தனா...
ரன்வீருடன் ராஷ்மிகா மந்தனா...

இன்னொரு பக்கம், பாலிவுட்டும் ராஷ்மிகாவை வாரி அணைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அமிதாப் பச்சனின் மகளாக ‘குட் பை’ படத்தில் நடித்திருந்தார். அவரது துள்ளல் நடிப்பை விமர்சகர்கள் புகழ்ந்து எழுதினார்கள். ஆனாலும் படம் என்னவோ அத்தனை சக்சஸாகப் போகவில்லை.

பாலிவுட்டின் அறிமுகப் படம் ‘அவுட்’ என்றானதும் ராஷ்மிகாவின் பாலிவுட் நுழைவு புஷ்ஷ்... ஆகிவிட்டது என்றார்கள். ஆனால், ‘புஷ்பா - தி ரைஸ்’ இந்திப் பதிப்பு உருவாக்கிய தாக்கம், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் ராஷ்மிகாவின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கூகுளில் தேடத் தொடங்கினார்கள். அதன் விளைவாக, இந்தியில் 3 படங்கள் தற்போது அவர் கைவசம் உள்ளன.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

‘குட்பை’ படத்தைத் தொடர்ந்து சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக இந்தியில் ராஷ்மிகா நடித்த ‘மிஷன் மஞ்சு’ நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லேட்டஸ்டாக, பாலிவுட்டின் முன்வரிசை ஹீரோவான ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்துள்ள படம் ‘அனிமல்’. இப்படத்தில் ரன்பீருக்கு ‘லிப் லாக்’ செய்து ராஷ்மிகா நடித்திருப்பது தான் தற்போது டோலிவுட்டில் வைரல்.

இந்தியில் தயாராகியிருக்கும் ‘அனிமல்’, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. அப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் இடம்பெற்றுள்ள ‘போகாதே’ என்கிற பாடல் இணையத்தில் வெளியாக, அப்பாடல் காட்சியில் ரன்பீருக்கு ராஷ்மிகா காட்டி இருக்கும் தாராளத்தைப் பார்த்துவிட்டு டோலிவுட் ரசிகர்கள் புலம்பித் திரிகிறார்கள். குறிப்பாக பிரபாஸின் ரசிகர்கள்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

‘விஜய் தேவரகொண்டா தவிர, எந்தவொரு தென்னிந்திய நடிகருடனும் ராஷ்மிகா இப்படி ‘லிப் லாக்’ செய்து நடித்ததில்லை. “ராஜ் கபூரின் பேரன் என்பதற்காக ரன்பீர் மட்டும் என்ன ஸ்பெஷலா? ராஷ்மிகா எங்கள் பிரபாஸுக்கும் ‘லிப் லாக்’ வாய்ப்பை அளிக்க வேண்டும்” என்று பிரபாஸ் ரசிகர்கள் ஆதங்கத்தைக் கொட்டி வருகிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in