நடிகை ராஷ்மிகாவின் சம்பளம் இத்தனை கோடியா?: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

நடிகை ராஷ்மிகாவின் சம்பளம் இத்தனை கோடியா?: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஷ்மிகா மந்தனா, கார்த்தியின் ’சுல்தான்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் ’வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’, அமிதாப் பச்சனுடன் ’குட்பை’ படங்களில் நடித்துள்ளார். ரன்பீர் கபூருடன் ’அனிமல்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அல்லு அர்ஜுனுடன் ’புஷ்பா 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தனது சம்பளத்தை ராஷ்மிகா உயர்த்தியுள்ளார். அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய அவர், இப்போது அதன் இரண்டாம் பாகத்துக்கு ரூ.4 கோடி கேட்டிருக்கிறார். அதையும் அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்கச் சம்மதித்துள்ளது என்கிறார்கள்.

இந்தி வாய்ப்புகள் அவருக்கு அதிகரித்து வருவதால் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in