பாலிவுட்டில் பிஸியாகும் ராஷ்மிகா மும்பைக்கு ஷிஃப்டாகிறார்

பாலிவுட்டில் பிஸியாகும் ராஷ்மிகா  மும்பைக்கு ஷிஃப்டாகிறார்

நடிகை ராஷ்மிகா மந்தனா, மேலும் ஒரு பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் அதிகமான வாய்ப்புகள் கிடைத்ததால், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கும் வந்த ராஷ்மிகா, இப்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் ’வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்தியில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’, அமிதாப் பச்சனுடன் ’குட்பை’, ரன்பிர் கபூருடன் ’அனிமல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதை சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். இதற்கிடையே அல்லு அர்ஜுனுடன்’புஷ்பா 2’ படமும் இருக்கிறது. இதில் ’குட் பை’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது.

டைகர் ஷெராஃப் , ராஷ்மிகா
டைகர் ஷெராஃப் , ராஷ்மிகா

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தில் பிரபல இந்தி ஆக்‌ஷன் ஹீரோ டைகர் ஷெராஃப் ஹீரோவாக நடிக்கிறார். ஷஷாங் கைதான் இயக்குகிறார். இந்தி பட வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால், ராஷ்மிகா தனது வீட்டை மும்பைக்கு மாற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in