’புஷ்பா’
’புஷ்பா’

’புஷ்பா 2’ இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்: ராஷ்மிகா மந்தனா

’புஷ்பா’ படத்தின் 2-ம் பாகம் இதைவிட பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து, சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள படம் ’புஷ்பா’. இதில் ராஷ்மிகா மந்தனா, வள்ளி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். பகத் பாசில், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, சுனில், தனஞ்செயா, அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ’ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடிகை சமந்தா ஆடியுள்ளார். இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார். சுகுமார் இயக்கியுள்ளார்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு, தமிழ் மட்டுமின்றி, மலையாளம், இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த இந்திப் பிரபலங்கள், அல்லு அர்ஜுன் நடிப்பைப் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், முதல் பாகத்தை விட அடுத்த பாகம் இன்னும் மிரட்டலாக இருக்கும் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், ‘‘புஷ்பா படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி. உங்கள் ஆதரவைக் கண்டு இன்னும் உழைக்கத் தோன்றுகிறது. ’புஷ்பா’வின் அடுத்த பாகம் இதைவிட பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று உறுதியாகக் கூறுகிறேன்’’ என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.

’புஷ்பா’வின் அடுத்த பாகம் இந்த வருட இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in