மீண்டும் ஒரு டாப் ஹீரோ படத்தில் ராஷ்மிகா

மீண்டும் ஒரு டாப் ஹீரோ படத்தில் ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா மேலும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

கன்னட சினிமாவில் இருந்து தெலுங்குக்கு வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் ஹிட்டாயின. தொடர்ந்து மகேஷ்பாபு உள்பட முன்னணி நடிகர்களுடன் அங்கு நடித்து வருகிறார்.

தமிழில் கார்த்தி ஜோடியாக ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ படம், அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

ராஷ்மிகா, ரன்பீர் கபூர்
ராஷ்மிகா, ரன்பீர் கபூர்

அவர் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’ அமிதாப் பச்சனுடன் ’குட்பை’ ஆகிய இந்திப் படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

இதற்கிடையே மேலும் ஒரு படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபல இளம் இந்தி ஹீரோ ரன்பீர் கபூர் நடிக்கும் ’அனிமல்’ படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் முதலில் பரினீதி சோப்ரா நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகியதை அடுத்து, ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் படத்தில் இடம் பெற்றுள்ளதை, தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் உறுதிப்படுத்தி உள்ளது. கோடையில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் அணில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தை ’அர்ஜுன் ரெட்டி’ சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in