'அந்த வதந்தி உண்மைதான்’: உறுதிப்படுத்திய ராஷ்மிகா

'அந்த வதந்தி உண்மைதான்’: உறுதிப்படுத்திய ராஷ்மிகா
StarsUnfolded.co

அந்த ஹீரோவுடன் நடிப்பதாக வந்த வதந்தி உண்மைதான் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, வம்சி பைடிபள்ளி இயக்கும் ’வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’, அமிதாப் பச்சனுடன் ’குட்பை’, ரன்பிர் கபூருடன் ’அனிமல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே அல்லு அர்ஜுனுடன்’புஷ்பா 2’ படமும் இருக்கிறது. இதில் ’குட் பை’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது.

டைகர் ஷெராஃப்புடன், ராஷ்மிகா
டைகர் ஷெராஃப்புடன், ராஷ்மிகா

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு இந்தி படத்தில் டைகர் ஷெராஃப்புடன் அவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அந்த வதந்தி உண்மைதான் என்று நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். அது விளம்பரப் படம் என்றும் டைகர் ஷெராஃபுடன் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது என்றும் விரைவில் எதிர்பாருங்கள் என்றும் தெரிவித்துள்ள அவர், ஃபயர் எமோஜியை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in