`தளபதி 66’ படத்தில் அவர்தான் ஹீரோயின்: அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் 66-வது படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகையை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் வரும் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். யோகி பாபு, இயக்குநர் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

இந்தப் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். விஜய்யின் 66-வது படமான இதை, தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இதில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதை கீர்த்தி சுரேஷ் மறுத்திருந்தார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

பின்னர் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டது. நடிகை ராஷ்மிகாவுக்கு இன்று பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள, வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம், அவர் விஜய் ஜோடியாக நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in