பால்ய தோழிகளுடன் பாரம்பரிய உடையில் ராஷ்மிகா: வைரலாகும் புகைப்படம்

பால்ய தோழிகளுடன் பாரம்பரிய உடையில் ராஷ்மிகா: வைரலாகும் புகைப்படம்

தனது தோழியின் திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, கொடவா ஸ்டைலில் உடையணிந்து கலந்துகொண்டார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவருக்கு வாய்ப்பு அதிகரித்ததால், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், அடுத்து விஜய் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வருவதால், பிசியாக நடித்து வருகிறார். ’நேஷனல் கிரஷ்’ என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவின் பூர்வீகம் குடகு மாவட்டம். இந்நிலையில் ராஷ்மிகாவின் தோழி ஒருவருக்கு குடகில் திருமணம் நடந்தது.

படங்களில் பிசியாக இருந்தாலும், பால்ய தோழியின் திருமணத்தில் கலந்துகொண்டார் ராஷ்மிகா. அவர், கொடவா சமுதாய முறைப்படி தோழிகளுடன் சேலை கட்டி இருந்தார். அவர் தோழிகளுடன் எடுத்துக் கொண்ட அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவர் அழகை புகழ்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in