விக்ரம் ஜோடியாகிறாரா 'நேஷனல் கிரஷ்’ நடிகை?

விக்ரம் ஜோடியாகிறாரா 'நேஷனல் கிரஷ்’ நடிகை?

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா',' பொன்னியின் செல்வன்' படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன. 'கோப்ரா’ ஆகஸ்ட் 12-ம் தேதியும், ’பொன்னியின் செல்வன்’ செப்டம்பர் 30-ம் தேதியும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, அவர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விக்ரமின் 61-வது படமான இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் தொடக்க சென்னையில் சமீபத்தில் நடந்தது. கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் சில உண்மைச் சம்பவங்களில் அடிப்படையில் உருவாக இருக்கிறது. 19-ம் நூற்றாண்டில் நடக்கும் கதையான இதில், விக்ரம் ஜோடியாக நடிக்க, 'நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நடிகை ராஷ்மிகா, இப்போது விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் மிஷன் மஜ்னு, குட்பை படங்களை முடித்துள்ள அவர், அனிமல் என்ற படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா 2 படத்திலும் நடிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in