ராஷ்மிகா மந்தனாவின் பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராஷ்மிகா மந்தனாவின் பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள பாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா, இப்போது விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ’மிஷன் மஜ்னு’, அமிதாப் பச்சனுடன் ’குட்பை’ படங்களை முடித்துள்ள அவர், ரன்பிர் கபூருடன் ’அனிமல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ’புஷ்பா 2’ படத்திலும் நடிக்க இருக்கிறார்.

’குட் பை’ படத்தில்
’குட் பை’ படத்தில்

இந்நிலையில், அவர் நடித்துள்ள இந்திப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய முதல் பாலிவுட் படம் ’மிஷன் மஜ்னு’வாக இருந்தாலும் முதலில் ரிலீஸ் ஆக இருப்பது ’குட் பை’ படம்தான். விகாஷ் பால் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அமிதாப், ராஷ்மிகாவுடன் நீனா குப்தா, சுனில் குரோவர், எல்லி அவ்ரம் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை நடிகை ராஷ்மிகா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதல் படத்தின் ரிலீஸுக்கு முன்பே நடிகை ராஷ்மிகா அங்கு பிசியான நடிகையாகி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in