`உங்கள் வார்த்தைகள் என்னை புண்படுத்துகின்றன'- ரசிகர்களின் கேள்வியால் ராஷ்மிகா மந்தனா வேதனை

`உங்கள் வார்த்தைகள் என்னை புண்படுத்துகின்றன'- ரசிகர்களின் கேள்வியால் ராஷ்மிகா மந்தனா வேதனை

ரசிகர்களின் உருவகேலி மற்றும் வெறுப்புணர்வு தன்னை மிகவும் புண்படுத்துவதாக நடிகை ராஷ்மிகா மந்தனா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்போது பாலிவுட்டிலும் பல படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘மிஷன் மஞ்சு’ திரைப்படம் வெளியானது. இதனை ஒட்டி அவர் கொடுத்த பேட்டியில் தன்னைப் பற்றிய ரசிகர்களின் கேலிக்கு பதிலளித்துள்ளார். அதில் அவர், “இந்த சினிமாத் துறையில் ஐந்தாறு வருடங்களாக இருக்கிறேன். இங்கு எப்போதும் நம்மையும் நம் படங்களையும் கொண்டாட மட்டுமே செய்வார்கள் என்பதை எதிர்பார்க்கக் கூடாது. சமீபமாக எனக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்பி வருகின்றனர். அது ஏன் என எனக்கு புரியவில்லை.

நான் உடற்பயிற்சி செய்தால் பார்ப்பதற்கு பையன் போல இருப்பதாகக் கூறுகிறார்கள். இல்லை எனில் பருமனாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பேசாமல் இருந்தால் திமிரு என்கிறார்கள். நான் என்னதான் செய்வேன்? நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு என்னதான் பிரச்சினை? உங்கள் வார்த்தைகள் என்னை புண்படுத்துகின்றன” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in