நடிகர் விஜய்யுடன் நெருக்கமான செல்ஃபி : இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரபல நடிகை

நடிகர் விஜய்யுடன் நெருக்கமான  செல்ஃபி : இன்ஸ்டாவில் வெளியிட்ட பிரபல நடிகை

நடிகர் விஜய்யுடன் ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஷ்மிகா மந்தானா செல்ஃபி பகிர்ந்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் விஜய் தனது 66-வது படமான ‘வாரிசு’ கதையில் நடித்து வருகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஷ்யாம், யோகி பாபு என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறது. தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகி வரும் நிலையில், சென்னை- ஹைதராபாத் என மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய நிலையில், படத்தின் முதல் பாடல் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அப்டேட் கொடுத்திருந்தார். இடையில் படத்தின் பாடல் காட்சிகள், படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும், கடந்த ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் அடுத்த வருட பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு முன்பே நடிகர் விஜய்யின் முந்தைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து தேதி பிரச்சினைகள் காரணமாக ராஷ்மிகாவுக்கு அந்த வாய்ப்பு அமையாமல் போனது. அதனால், ‘வாரிசு’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம் என தெரிவித்திருந்தார் ராஷ்மிகா.

இப்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்து பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in