பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக ஹீரோயின்களுக்குள் போட்டி!

பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக ஹீரோயின்களுக்குள் போட்டி!

பிரபல பான் இந்தியா ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகுபலி படங்களுக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகின்றன. அவர் நடித்து சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இப்போது சலார் படத்தில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்து அமிதாப் பச்சான், தீபிகா படுகோனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்தப் படத்தில் திஷா பதானியும் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா, பிரபாஸ், கியாரா அத்வானி
ராஷ்மிகா மந்தனா, பிரபாஸ், கியாரா அத்வானி

இந்தப் படத்தை அடுத்து ’அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் ரெட்டியின் ஸ்பிரிட் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். த்ரில்லர் கதையை கொண்ட இதில் ஹீரோயினை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. ராஷ்மிகா மந்தனா அல்லது பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.

ராஷ்மிகா, புஷ்பா படத்துக்குப் பிறகு பாலிவுட்டிலும் பிரபலம் அடைந்திருப்பதாலும் இந்திப் படங்களிலும் நடித்து வருவதாலும் அவரை நடிக்க வைக்கலாம் என்பது இயக்குநரின் விருப்பம். இருந்தாலும் இந்தப் படத்தில் வாய்ப்பைப் பிடிக்க இரண்டு ஹீரோயின்களுக்குள் போட்டி நடப்பதாகக் கூறுகிறது டோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in