நிர்வாணப் பட விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்ட ஹீரோ

நிர்வாணப் பட விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்ட ஹீரோ

நிர்வாணப் புகைப்பட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக 2 வார கால அவகாசம் வேண்டும் என்று நடிகர் ரன்வீர் சிங் கேட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங். இவர் கடந்த மாதம் நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.

இந்நிலையில் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று, நடிகர் ரன்வீர் சிங் மீது போலீஸில் புகார் அளித்தது. அதில், ரன்வீர் சிங் நிர்வாணப் படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார் என்றும் அவர்களை அவமதித்துவிட்டதாகக் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த செம்பூர் போலீஸார், 22-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராக ரன்வீர் சிங்குக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராவதற்கு மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என நடிகர் ரன்வீ ர் சிங், கேட்டுள்ளார். இதனால் இன்று அவர் ஆஜராகமாட்டார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in