‘நேரில் ஆஜராகுங்கள் ரன்வீர்’ - நிர்வாணப் புகைப்பட விவகாரத்தில் போலீஸ் சம்மன்

‘நேரில் ஆஜராகுங்கள் ரன்வீர்’ - நிர்வாணப் புகைப்பட விவகாரத்தில் போலீஸ் சம்மன்

நிர்வாணப் புகைப்பட விவகாரத்தில், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங். ‘லூட்டேரா’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’, ‘சிம்பா’, ‘கல்லி பாய்’, ‘83’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை தீபிகா படுகோனைக் காதலித்து, கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

வித்தியாசமான ஆடைகள் அணிவது ரன்வீரின் ஸ்டைல். அதோடு வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் அடிக்கடி போட்டோஷூட் நடத்துவதும் வழக்கம். இந்நிலையில் இதழ் ஒன்றுக்காக, ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட்டில் பங்கேற்றார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. சர்ச்சையும் வெடித்தது.
இந்தப் புகைப்படங்களின் மூலம் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங் மீது புகார் கொடுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 22-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அவருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மனைக் கொடுக்க போலீஸார் அவர் வீட்டுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. வெளிநாடு சென்றுள்ள ரன்வீர் வரும் 16-ம் தேதி மும்பை திரும்புவார் என்றும் அப்போது அவருக்கு சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in