Bigg Boss7: ரேங்க்கிங் டாஸ்க்... ஜோவிகா- பிரதீப்புக்கு இடையே முற்றிய சண்டை!

பிரதீப்- ஜோவிகா
பிரதீப்- ஜோவிகா

பிக் பாஸ் வீட்டில் தற்போது நடக்கும் ரேங்க்கிங் டாஸ்க்கில் பிரதீப்புக்கும் ஜோவிகாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெறுவதாகக் காட்டியுள்ள தற்போதைய புரோமோ நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த முதல் நாளில் இருந்தே கடுமையான டாஸ்க்குகளையும் சச்சரவுகளையும் ஏற்படுத்தும் விதமாக பிக் பாஸ் பல சம்பவங்களை செய்து வருகிறார். கூடுதலாக இந்த சீசனில் பிக் பாஸ் வீடு இரண்டாகப் பிரிந்து பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என மாறியிருக்கிறது. தற்போது பிக் பாஸ் இல்லத்திற்குள் ரேங்கிங் டாஸ்க் நடந்து வருகிறது. பொதுவாக நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில்தான் இந்த ரேங்கிங் டாஸ்க் வரும். ஆனால், நிகழ்ச்சி ஆரம்பித்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ரேங்கிங் டாஸ்க்கை எடுத்து போட்டியாளர்களுக்குள் பரபரப்பு தீ மூட்டி இருக்கிறார் பிக் பாஸ்.

இதில் போட்டியாளர்கள் 1 முதல் 15 இடங்களுக்கான ரேங்கில் நிற்க வேண்டும். இதில், பிரதீப் ஆண்டனி முதல் இடத்தை பிடித்துவிட்டார். அதற்கு அடுத்தபடியாக ஜோவிகா இரண்டாவது இடத்தில் நின்று கொண்டிருந்தார். இதில் ஜோவிகா முதல் இடத்தைப் பெற தான் தகுதியானவர் என விவாதம் செய்து பிரதீப்பிடம் இருந்து அந்த இடத்தை வாங்க வேண்டும். இந்த விவாதம்தான் தற்போது முற்றிப்போய் பிரதீப், ஜோவிகா இடையில் சண்டை ஆகியுள்ளது.

ஜோவிகா
ஜோவிகா

பிரதீப் ஜோவிகாவுக்கு முதல் இடத்தை விட்டுத்தர மாட்டேன் என விடாப்பிடியாக இருக்க, ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது வாழ்க்கை நிலையை பற்றி பேசத் தொடங்கினர். அப்போது பிரதீப் தான் ஏழை என்பதாலும், தனக்கு ஜோவிகாவைப் போல ஆடம்பர வாழ்க்கை வாழ முடியவில்லை என்பதாலும், அதனை அடைய எனக்கு இந்த டைட்டில் முக்கியம், அதனால் எனக்கு முதல் இடம் வேண்டும் எனவும் கூறினார்.

பிரதீப்-ஜோவிகா
பிரதீப்-ஜோவிகா

இதற்கு பதிலளித்த ஜோவிகா, நானும் மிடில் கிளாஸ் பொண்ணு தான் என கூறியதைக் கேட்டு கடுப்பான பிரதீப், ‘இப்படி சொல்லி மக்களை ஏமாத்தாத’ என சொல்கிறார். இதைக் கேட்டதும் ஜோவிகாவும் கடுப்பாகி பதிலுக்கு சத்தம் போடுகிறார். இப்படியான இந்தப் போட்டியில், பிரதீப்-ஜோவிகாவின் அனல் பறக்கும் வாக்குவாதம் இன்றைய எபிசோடில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஸ்மால் பாஸ் வீட்டில் பிரதீப் இருந்தபோதே சமையல் செய்வது தொடர்பாக பிரதீப்-ஜோவிகாவுக்கும் சண்டை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in