'ரஞ்சிதமே’ பாடல் காப்பியா? - பாடலாசிரியர் கொடுத்த விளக்கம்

'ரஞ்சிதமே’ பாடல் காப்பியா? - பாடலாசிரியர் கொடுத்த விளக்கம்

‘வாரிசு’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல் காப்பி என்று எழுந்துள்ள சர்ச்சைக்கு பாடலாசிரியர் விவேக் விளக்கம் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இருந்து சமீபத்தில் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடல் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. பாடல் வரவேற்பைப் பெற்ற அதே சமயம், இந்தப் பாடலின் ட்யூன் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான ‘மொச்சைக்கொட்ட பல்லழகி’ பாடலின் காப்பி என்ற சர்ச்சை எழுந்தது.

மேலும் இந்தப் பாடலின் சில வரிகளும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது பாடலின் காப்பியா என்ற சர்ச்சைக்கு பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

பாடலாசிரியர் விவேக்
பாடலாசிரியர் விவேக்

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 'வாரிசு' படத்தில் ‘மொச்சைக் கொட்டைப் பல்லழகி’ பாடல் வந்த பிறகே ‘ரஞ்சிதமே’ பாடல் தொடங்கும் என்பதால் அதே ட்யூனை வைத்துள்ளோம். இதற்கானக் கிரெடிட்ஸை நாங்கள் படத்திலும் கொடுத்துள்ளோம். நாட்டுப்புற பாடலான இதே பாடல் ட்டியூனில் இதற்கு முன்பு, 'தஞ்சாவூரு மண்ணெடுத்து',' மக்க கலங்குதப்பா' உள்ளிட்டப் பல பாடல்கள் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in