'ரஞ்சிதமே… ரஞ்சிதமே': வைரலான 'வாரிசு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ

'ரஞ்சிதமே… ரஞ்சிதமே':  வைரலான 'வாரிசு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ

நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரோமோ அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இதனிடையே 'வாரிசு' படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக இப்படத்தில் டீசர், டிரெய்லர், ஃபர்ஸ் சிங்கள் உள்ளிட்ட அப்டேட்கள் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

அவர்களை குஷிப்படுத்தும் விதமாக 'வாரிசு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் புரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமன் இசையில் விவேக் எழுதிய இந்த பாடலை விஜய் மற்றும் மானசி பாடியுள்ளனர். `ரஞ்சிதமே ரஞ்சிதமே' என தொடங்கும் இந்த பாடலின் புரோமோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in