சாவர்க்கர் பயோபிக்கில் பிரபல ஹீரோ!

சாவர்க்கர் பயோபிக்கில் பிரபல ஹீரோ!

சாவர்க்கரின் வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது. இதில் பிரபல இந்தி நடிகர் சாவர்க்கராக நடிக்கிறார்.

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்து மகாசபையை உருவாக்கிய வருமான, வீர் சாவர்க்கர் எனப்படும் வினாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கைக் கதை, சினிமாவாக உருவாகிறது. இந்தப் படத்தை பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குகிறார்.

இவர், தமிழில், அஜித்தின் `ஆரம்பம்', சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படங்களில் நடித்தவர்.

ரன்தீப் ஹூடா, வீர சாவர்க்கர்
ரன்தீப் ஹூடா, வீர சாவர்க்கர்

சாவர்க்கரின் பயோபிக் படத்துக்கு ‘ஸ்வதந்த்ர வீர் சாவர்க்கர்’ (Swatantra Veer Savarkar) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆனந்த் பண்டிட், சந்தீப் சிங் ஆகியோர் தயாரிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகர் ரன்தீப் ஹூடா, சாவர்க்கராக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள ரன்தீப் ஹூடா, ‘சில கதைகள் சொல்லப்படுகின்றன, சில கதைகள் வாழ்கின்றன. சாவர்க்கரின் பயோபிக்கில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in