சாவர்க்கர் பாத்திரத்தில் நடித்து படத்தை இயக்கும் பாலிவுட் நடிகர்!

சாவர்க்கர் பாத்திரத்தில் நடித்து படத்தை இயக்கும் பாலிவுட் நடிகர்!

இந்துத்துவத் தலைவரும் இந்து தேசியவாதக் கொள்கையை உருவாக்கியவருமான வினாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தயாராகிவருகிறது. இப்படத்தில் சாவர்க்கர் பாத்திரத்தில் நடிப்பதுடன் படத்தையும் இயக்கவிருக்கிறார் பாலிவுட் நடிகர் ரண்தீப் ஹுடா.

விலகிக்கொண்ட மகேஷ் மஞ்ச்ரேக்கர்

‘சுதந்திர வீர் சாவர்க்கர்’ எனும் பெயரில் உருவாகிவரும் இப்படத்தை புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்குவார் என்றே செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், சில காரணங்களால் அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொண்டார். இதையடுத்து, இப்படத்தில் சாவர்க்கர் வேடத்தில் நடிக்கும் ரண்தீப் ஹுடாவே படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் அடுத்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படத்துக்காக, தனது உடல் எடையில் 18 கிலோ குறைத்திருக்கிறாராம் ரண்தீப் ஹுடா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in