ரன்பீரின் மிரட்டல் தோற்றத்தில் 'அனிமல்' ஃபரஸ்ட் லுக் வெளியானது

ரன்பீரின் மிரட்டல் தோற்றத்தில் 'அனிமல்' ஃபரஸ்ட் லுக் வெளியானது

'அர்ஜுன் ரெட்டி' படப்புகழ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் புதிய படைப்பான 'அனிமல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூரின் மிரட்டல் தோற்றத்தில் இந்த ஃபரஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் பெரும் வெற்றியடையந்தவர் இயக்குநர் சந்தீப்ரெட்டி வங்கா. இப்படத்தின் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' மூலம் பாலிவுட்டையும் அதிர வைத்தார். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் நடிப்பில் 'அனிமல்' படத்தை சந்தீப்ரெட்டி வங்கா இயக்குகிறார். பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டிசீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் வகையில், 'அனிமல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ரன்பீர் கபீர் மிரட்டல் தோற்றத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் மாறுபட்ட ஆக்‌ஷன் படமாக 'அனிமல்' உருவாகிறது. ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் 2023 ஆக.11-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in