முடிவானது ரன்பீர் - அலியா பட் திருமண தேதி

அலியா பட், ரன்பீர் கபூர்
அலியா பட், ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர், அலியா பட் திருமணம் எப்போது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் - நடிகை நீது சிங் தம்பதியின் மகன் ரன்பீர் கபூர். சஞ்சய் லீலா பன்சாலியின் ’சாவரியா’ படத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார். இவரும் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகள் அலியா பட்டும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். அலியா பட், சமீபத்தில் வெளியான ராஜமவுலியின் 'ஆர் ஆர் ஆர்' படத்தில் சீதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

அலியா பட், ரன்பீர் கபூர்
அலியா பட், ரன்பீர் கபூர்

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான இவர்கள் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு. பின்னர் அது வதந்தி என்று தெரிய வரும். இந்நிலையில், இவர்கள் திருமணம் வரும் 17 -ம் தேதி மும்பையில் நடக்க இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அலியாவின் தாத்தா ரஸ்தான், அவர்கள் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் வரும் 17 -ம் தேதி எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ரன்பீர் கபூர் குடும்பத்துக்குச் சொந்தமான ஆர்.கே.ஸ்டூடியோவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்று பாலிவுட்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in