மும்பையில் பிரம்மாண்ட வீடுகட்டும் ரன்பீர் - அலியாபட் ஜோடி... முழுதாய் கட்டிமுடிக்க 6 வருடம் ஆகுமாம்!

வீட்டைப் பார்வையிடும் அலியா பட்
வீட்டைப் பார்வையிடும் அலியா பட்

ரன்பீர்- அலியாபட் தம்பதி மும்பை, பாந்த்ரா பகுதியில் பிரம்மாண்டமாக புது வீடு ஒன்றைக் கட்டி வருகின்றனர் . கட்டுமானப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனது மாமியார் நீது கபூர் மற்றும் ரன்பீருடன் இணைந்து மும்பையில் தாங்கள் பிரம்மாண்டமாக கட்டி வரும் புது வீட்டை இன்று பார்க்கச் சென்றிருக்கிறார் நடிகை அலியாபட்.

கிட்டத்தட்ட ஐந்து தளங்கள் கொண்ட வீடாக இது உருவாகி வருகிறது. இந்த வீடு முழுமையாகத் தயாராக ஆறு வருடங்கள் பிடிக்கும் என்கிறார்கள். முதல் இரண்டு தளங்கள் மட்டுமே தற்போது கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்தத் தளங்களுக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

ஹோலி பண்டிகை முடிந்து படப்பிடிப்பிற்கு பிரேக் விட்டிருக்கும் அலியா- ரன்பீர் ஜோடி வீட்டின் பணிகளை மேற்பார்வையிடும் வீடியோவும், புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

வீட்டைப் பார்வையிடும் ரன்பீர்
வீட்டைப் பார்வையிடும் ரன்பீர்

கடந்த வருடம் அலியாவின் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படம் வெளியாகி ஹிட்டானது. ரன்பீரின் ‘அனிமல்’ படம் பல சர்ச்சைகளை எதிர்கொண்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக இருக்கிறது.

இதில்லாமல், ‘ராமாயணம்’ படத்தில் ராமனாக நடிப்பதற்காக வில் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார் ரன்பீர். இடையிடையே செல்ல மகள் ராஹாவுட்னும் நேரம் செலவிட்டும் மகிழ்ந்து வருகிறார் .

இதையும் வாசிக்கலாமே...  


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in