குழந்தையுடன் ஹோலி கொண்டாடிய நட்சத்திர தம்பதி... வைரலாகும் வீடியோ!

குழந்தையுடன் ஹோலி கொண்டாடிய நட்சத்திர தம்பதி... வைரலாகும் வீடியோ!

நட்சத்திர தம்பதியரான ரன்பீர் கபூர்- அலியாபட் ஜோடி, தங்களது செல்ல மகள் ராஹாவுடன் முதல் ஹோலி பண்டிகையை வரவேற்றுள்ளனர். இந்த க்யூட் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய ஹோலி கொண்டாட்டங்களையடுத்து, வட இந்தியாவில் வண்ணப்பொடிகளை தூவி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹேமமாலின், ரகுல் ப்ரீத் சிங், பரினிதி சோப்ரா என பிரபலங்களும் தங்களது ஹோலி கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி ரன்பீர்- அலியாபட் மகள் ராஹாவுடன் முதல் ஹோலியைக் கொண்டாடியுள்ளனர். இவர்களுடன் நடிகை நதியாவும் இணைந்துள்ளார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, 'ரன்பீர், அலியா, ராஹாவுடன் இணைந்து ஹோலி கொண்டாடியது மகிழ்ச்சி’ எனக் கூறியுள்ளார்.

அலியா பட், ரன்பீர் கபூர்
அலியா பட், ரன்பீர் கபூர்

மகள் ராஹா பிறந்த பிறகு தன்னுடைய வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக இதற்கு முன்பு ரன்பீர் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, சிகரெட், மது போன்ற பழக்கங்களை தனது மகளுக்காக கைவிட்டதாகவும் அவளுக்காக பொறுப்பான தந்தையாக மாறியுள்ளதாகவும் பெருமிதம் கொண்டுள்ளார் ரன்பீர்.

அலியாவும் திருமணம், குழந்தை என பிரேக் எடுக்காமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in