‘ஆர்ஆர்ஆர்’ குழுவுக்கு விருந்தளித்த ராணா

‘ஆர்ஆர்ஆர்’ குழுவுக்கு விருந்தளித்த ராணா

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படமான ‘ஆர்ஆர்ஆர்’ இன்னும் 2 வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். பான் இந்தியா ரிலீஸ் என்பதால், சமீபத்தில் மும்பையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக சல்மான்கான் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சிக்காக மும்பை சென்றபோது, ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மூவரும் மும்பையில் உள்ள நடிகர் ராணா வீட்டுக்கும் சென்றுள்ளனர். ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கைக்கு புது ஒளி தந்த இயக்குநர் ராஜமௌலியை தனது வீட்டுக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்துள்ளார் ராணா. தனது வீட்டு பால்கனியில் நின்றபடி தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.