விஜய் ஆண்டனி ஜோடியாக 3 ஹீரோயின்கள்

கொல்கத்தாவில் அடுத்த ஷூட்டிங்
மஹிமா
மஹிமா

விஜய் ஆண்டனியின் ’ரத்தம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

’தமிழ்ப் படம்’ சி.எஸ்.அமுதன், அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இன்பினிட்டி பிலிம்ஸ் வெஞ்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது. படத்துக்கு ’ரத்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். ’தமிழ்ப்படம்’ என். கண்ணன் இசை அமைக்கிறார்.

மஹிமா , ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா
மஹிமா , ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, மஹிமா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதுபற்றி இயக்குநர் சி.எஸ்.அமுதன் கூறும்போது, ‘படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து கொல்கத்தாவில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். இப்போது அங்குதான் இருந்திருக்க வேண்டும். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் செல்லவில்லை. பிப்ரவரி முதல் தேதி அடுத்த ஷெட்யூல் தொடங்கும். அதை முடித்தால், படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிடும். அதற்குப் பிறகு ஸ்பெயினில் சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in