`தலைவர் 169’: ரஜினிக்கு வில்லியாகிறாரா பிரபல நடிகை?

`தலைவர் 169’: ரஜினிக்கு வில்லியாகிறாரா பிரபல நடிகை?

ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 169’ படத்தில் பிரபல நடிகை அவருக்கு வில்லியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. சிவா இயக்கிய இந்தப் படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம், ரஜினிகாந்தின் 168-வது படம். இதையடுத்து ரஜினியின் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

’தலைவர் 169’ என தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இதில் பிரியங்கா மோகன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்றும் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

இதற்கிடையே நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ’படையப்பா’ படத்தில் நீலாம்பரி கேரக்டரில் ரஜினிக்கு வில்லியாக அவர் நடித்திருந்தார். அந்த கேரக்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதே போன்ற ஒரு கேரக்டரில் இந்தப் படத்திலும் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை.

Related Stories

No stories found.